
“மண்டைதீவு கடற்படையினர் வழமையான கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, படகு ஒன்றிலிருந்து பொதிகள் கடலில் வீசப்படுவதை அவதானித்தனர். அதனை துரத்திச் சென்ற போது, படகில் பயணித்தவர்கள் தப்பித்துவிட்டனர்.
பொதிகளை மீட்டு ஆராய்ந்த போது அவற்றுள் கஞ்சா போதைப்பொருள் உள்ளமை கண்டறியப்பட்டது. மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று பொலிஸார் கூறினர்.