பருத்தித்துறையில் பட்டப்பகலில் வீடுடைத்து 15 பவுண் திருட்டு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பருத்தித்துறை வியாபாரி மூலையில் பட்டப்பகலில் வீடுடைத்து 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வீட்டின் குடியிருப்பாளரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் நேற்று முற்பகல் வெளியில் சென்று மாலை 6 மணிக்கு வீடு திரும்பிய போது, பின் வாசல் கதவு உடைத்துக் காணப்பட்டுள்ளது. அதுதொடர்பில் ஆராய்ந்த போது, வீட்டின் அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 பவுண் தங்க நகைகள் திருட்டுப் போயிருந்துள்ளன.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் இன்று காலை முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் இன்று மாலை தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் சம்பவ இடத்தில் பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
Previous Post Next Post