பிரான்ஸில் கடலில் மூழ்கி 197 பேர் உயிரிழப்பு!


உள்ளிருப்பு வெளியேற்றத்தின் பின்னரான கோடை காலத்தில் மக்கள் கடல்கள் நோக்கியும், குளங்கள், நீர் நிலைகள் நோக்கியும் படையெடுத்துள்ளனர். இதனால் பெருமளாவன விபத்துக்கள் ஏற்பட்டுப் பலர் உயிரிழந்துள்ளனர்.

ஜுன் மாதத்திற்கும் ஜுலை மாதத்திற்கும் இடையில் பிரான்சில் கடல்களிலும், நீர் நிலைகளிலும்  மூழ்கி 197 பேர் சாவடைந்துள்ளனர். கடந்த வருடம் (2019) இதே காலப்பகுதியில் 96 பேர் மட்டுமே மூழ்கிச் சாவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்த விபத்துகளிற்கு மது போதையும் முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில்இ இப்படியான சாவுகளும் அதிகரித்துள்ளமை கவலைக்கிடமானது.

இதேவேளை பிரான்ஸில் கடந்த 03 ஆம் திகதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவரும் இவ்வாறு கடலில் மூழ்கி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post