பிரான்ஸில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவி அகால மரணம்! (படங்கள்)

பிரான்ஸில் யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பல்கலைக்கழக மாணவி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

பிரான்ஸில் தனது பல்கலைக்கழக சக நண்பிகளுடன் நேற்று முன்தினம் திங்கட்கிழமை கடலில் நீராடச் சென்றபோதே இத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இதில் யாழ்.தெல்லிப்பழைப் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்ட ரஞ்சன் அனிதா (வயது-19) என்ற பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

அந் நாட்டில் பல்கலைக்கழகத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட நிலையில் 5 சக நண்பிகளுடன் கடலில் நீராடச் சென்ற போது குறித்த மாணவி கடலின் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாகவும் ஏனைய மாணவிகள் எதுவித பாதிப்புக்களும் இன்று தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


Previous Post Next Post