பிரான்ஸை மீண்டும் உலுக்கும் கொரோனா! ஒரே நாளில் 4 ஆயிரத்தைத் தாண்டியது தொற்று!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இரண்டாவது நாளாக நேற்றும் ஒரே நாளில் கொரோனா தொற்று நான்காயிரத்தை கடந்துள்ளது.

பொது சுகாதார நிலையம் வெளியிட்ட தகவல்களின் படி, வெள்ளிக்கிழமை மாலை 4,586 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று வீதமும் அதிகரித்துள்ளது. ஓகஸ்ட் 12 ஆம் திகதியில் இருந்து 18 ஆம் திகதிவரை தொற்று வீதம் 3.4% வீதமாக உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் 2.4% வீதமாக மாத்திரமே இருந்துள்ளது.

மருத்துவமனையில் 4,745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 379 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் (வியாழன்-வெள்ளி) 23 பேர் சாவடைந்துள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனா வைரஸ் காரணமாக சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 30,503 ஆக அதிகரித்துள்ளது.
Previous Post Next Post