
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிரபா கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் காங்கிரஸ் அலுவலகத்தின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அலுவலகத்தில் முன்புற வீதியால் வந்தவர்களே தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்தவர்கள் கூறுவதுடன் மூவர் தாக்குதலை நடத்திவிட்டு ஓடுவதை அயலவர்கள் அவதானித்து தமக்கு கூறியதாகவும் தெரிவித்தனர்.
எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத போதிலும் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.