தேசியப் பட்டியல் மாவைக்குரியது! யாழ்.மாவட்டக் கிளை அதிரடித் தீர்மானம்!! (வீடியோ)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஆசனத்தை மாவை சேனாதிராசாவிற்கே வழங்க வேண்டும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் யாழ் மாவட்ட கிளை கூடி முடிவு செய்துள்ளது.

இன்று பகல் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியிலுள்ள கட்சியின் தலைமையகத்தில் கூட்டம் கூடியது.

இதன்போது- தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனத்தையும் மாவை சேனாதிராசாவிற்கே வழங்க வேண்டும். அதை பங்காளிக்கட்சிகளுடனும் பேசி முடிவு செய்ய வேண்டும்.

ஒருவேளை தேசியப்பட்டியல் தொடர்பாக வேறு ஏதாவது முடிவு செய்திருந்தால்இ அந்த முடிவை மீள்பரிசீலனை செய்யவும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானம் இரா.சம்பந்தனிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post