யாழ்.கொக்குவில் சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகத்துக்கு பொலிஸ் பாதுகாப்பு! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரிகைகளிற்கு பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது. ஊர் மக்களின் நியாயம் விசாரிக்கப்படாமல் ஆலய தர்மகர்த்தாவின் வேண்டுகோளின் அடிப்படையில் ஆலய சுற்றுப்புறத்தில் பொலிஸாரால் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் ஊர் மக்கள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

கொக்குவில் மேற்கு சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேககம் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறுகிறது. அதன் கிரியைகள் இன்று ஆரம்பமாகின. கிரியைகளிற்கு உள்ளூர் இளைஞர்கள் நியாயமான எந்த காரணமும் இல்லாமல் அவர்களால் இடையூறு ஏற்படும் என நினைத்து ஆலய சூழலில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த ஆலயம் தர்மகர்த்தாவின் கீழ் இயங்கி வந்தது. எனினும் ஆலயத்தின் திருப்பணிகளை மேற்கொள்ள சட்டத்தரணி எஸ். சோபிதன், பி.குருபரன் மற்றும் அ.சத்தியசீலன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் முயற்சியினால் தாயகத்திலும் புலம்பெயர் தேசத்திலுமாக சுமார் 20 மில்லியன் ரூபாய் பணமும் 5 மில்லியன் ரூபாய் பொருள்களும் சேகரிக்கப்பட்டு ஆலயத்தின் திருப்பணிகள் நிறைவடைந்தன.கணக்கறிக்கை தர்மகத்தமகத்தாவிடம் கடந்த ஓகஸ்ட் 16ஆம் திகதி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.

கடந்த 15ஆம் திகதி ஆலயத்துக்கு மதில் கட்டும் முயற்சி தர்மகர்த்தாவினால் முன்னெடுக்கப்பட்டது. அதனை சட்டத்துக்கு கட்டுப்பட்டு உரிய விதிமுறைகளைப் பின்பற்றி நல்லூர் பிரதேச சபையின் அனுமதியோடு முன்னெடுக்குமாறு கிராம மக்களால் கோரப்பட்டது. எனினும் அனுமதியைப் பெறாமல் பிரதேச சபைச் சட்டத்துக்குப் புறம்பாக மதிலை அமைப்பதற்கு ஆலய தர்மகர்த்தா நடவடிக்கை எடுத்தார்.

இந்த விடயத்தில் பிரதேச சபை தலையிட்டு இடைநிறுத்தியது. அதனால் திருப்பணியை முன்னின்று நடத்திய இளைஞர்கள் உள்ளிட்ட கிராம மக்களால் கொக்குவில் மேற்கு சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேக கிரியைகளில் குழப்பம் ஏற்படும் என ஊகித்து ஆலய தர்மகர்த்தா பொலிஸாரை பாதுகாப்புக்கு அழைத்துள்ளார். ஆனால் ஊர்மக்களிடம் அவர்களின் நிலைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்காத யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகப் பொலிஸார் ஆலய சூழலில் பாதுகாப்பை வழங்கியுள்ளார்கள்.

இதன் காரணமாக மக்கள், இளைஞர்கள் அச்சம் – அச்சுறுத்தல் இருப்பதாக கருதி ஆலய கிரியைகளாலோ ஏனைய செயற்பாடுகளிலோ பங்கேற்காத சூழ்நிலை காணப்படுவதாக ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.


Previous Post Next Post