தீவகத்திலிருந்து உலங்குவானூர்தி மூலம் எடுத்து வரப்பட்டது வாக்குப் பெட்டிகள்! (படங்கள்)

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் சுமூகமான முறையில் பொதுத் தேர்தல் வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் வாக்குப் பெட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உள்ள வாக்குகள் எண்ணும் மத்திய நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 லட்சத்து 79 ஆயிரத்து 848 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளார்கள். இவற்றில் தபால்மூல வாக்களிப்பு நீங்கலாக 4 லட்சத்து 58 ஆயிரத்து 345 வாக்காளர்களுக்காக 508 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புகள் இடம்பெற்றன. அதில் 71.8 சதவீத வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.

வழமை போன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலேயே வாக்கு எண்ணும் பணிகள் நாளை நடைபெறும். வாக்கெண்ணும் நிலையம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சீரற்ற காலநிலை நிலவுவதனால், நெடுந்தீவில் இருந்து உலங்குவானூர்தி மூலம் வாக்குப் பெட்டிகள மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டன.

அங்கே வாக்கெண்ணும் பணிகள் நடைபெறும். எழுவைதீவு மற்றும் அனலைதீவு உள்ளிட்ட தீவுகளில் இருந்து கடற்படையின் பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகள் எடுத்து வரப்பட்டன.





Previous Post Next Post