வடக்குக் கிழக்கில் எதிர்வரும் 28 ஆம் திகதி ஹர்த்தால்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வடக்கு, கிழக்கு உள்ளடங்கிய தமிழர் தாயகப்பகுதியில் எதிர்வரும் 28ஆம் திகதி ஹர்தாலுக்கு மேற்கொள்வதென அனைத்து தமிழ் கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

தியாகி திலீபனின் உள்ளீட்ட விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூறுவதற்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட தடை பற்றி ஆராய்வதற்காக அனைத்துக் கட்சிகளும் மீண்டும் இன்று மதியம் ஒன்றுகூடின.

கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன் போது உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செழுத்துவதற்கு எமக்கு உரிமை உண்டு. இந்த உரிமையை வலியுறுத்தி எதிர்வரும் 26ஆம் திகதி செல்வச் சந்திதி ஆலயத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்ளவுள்ளதோடு, அந் நாளை பிராத்தனைக்குரிய நாளாக அடையாளப்படுத்துகின்றோம்.

எமது உரிமைகள் மறுக்கப்பட்டமைக்கு எதிர்பு தெரிவிக்கும் வகையில் வடக்கு கிழக்கு தழுவிய ரீயில் எதிர்வரும் 28ஆம் திகதி ஹர்தாலுக்கு அனைத்துக் கட்சியினரால் அழைப்பு விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்றைய தினம் திலீபனின் நினைவேந்தல்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு நடாத்துவதற்கான தடையுத்தரவு கட்டளையை யாழ். நீதவான் நீதிமன்றம் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post