யாழ்.அத்தியடியில் பணிப் பெண் மீது வீட்டு எஜமானியின் மகளும் மருமகனும் தாக்குதல்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.அத்தியடிப் பகுதியில் வீட்டில் பணிபுரியும் பெண் மீது அவ் வீட்டின் எஜமானியின் மகளும் மருமகனும் தாக்குதல் நடத்தியதில் அவர் காயமடைந்துள்ளார்.

அத்தியடிப் பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டில் சிறு வயது முதல் அங்கேயே தங்கி, பணிப் பெண்ணாகப் பணியாற்றி வந்த 50 வயதுடைய பெண் மீதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன், குறித்த வீட்டின் உரிமையாளர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர்.
Previous Post Next Post