விரக்தியின் உச்சம்! விபத்தை ஏற்படுத்தி தற்கொலை செய்து கொண்ட பெண்?



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.சங்குப்பிட்டிப் பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தொன்றில் முன்னாள் பெண் போராளியான மீரா (வயது-43) என்பவர் உயிரிழந்திருந்தார். 

விரக்தியின் உச்சத்தில் இருந்த குறித்த பெண் விபத்தை ஏற்படுத்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக குறித்த விபத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். 

இது தொடர்பில் முகநூல் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்றை அப்படியே இங்கு தருகின்றோம். 

எடி பைத்தியக்காரி இப்படிச் செய்வாய் என்று ஜமனே எதிர்பார்த்திருக்கமாட்டார்.

பெண்ணியம்,பெண்விடுதலை என்றும் பெண்கள் தைரியமாக இருக்கவேண்டும் என்றும் அதிகம் பேசக்கூடிய ஒருத்திசெய்யும் செயலா இது?


இன்றைக்கு ஒரு 4 ஆண்டுகளுக்கு முன் முகப்புத்தகத்தினூடாக அறிமுகமாகிய ஒரு நட்பு.தன் ஏழ்மை நிலையை ஒருபோதும் பகிராமல் தன் மகிழ்வான பக்கங்களை மட்டுமே பகிர்ந்தபடி இருந்த ஒருத்தி.திடீர் ஒன்று ஒருநாள் திருநெல்வேலி சிக்னல் சந்தியில் நேரில் கண்டபோது தான் உண்மைதெரியும் அவளுக்கு ஒருகால் இல்லை என்று.ஆம் அவள் ஒரு முன்னாள் போராளி.

அப்போது நான் கல்லூரி மாணவன் உரும்பிராய் வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை மோட்டார்சைக்கிள் பெற்றோல் இல்லாமல் நின்றுவிட்டது.தற்செயலாக அந்தவழியால் வந்த மீரா அதை காண்கிறார்.(மீரா என்பது தான் அவள் பெயர் நான் நினைக்கிறேன் அது இயக்கப்பெயர் என்று) நில்லுங்கோ வாரன் என்று விரைந்து செல்கிறாள்.ஒரு போத்தல் பெற்றோல் வாங்கிவருகிறாள்.தருகிறாள்.பணம் கொடுத்தேன் வாங்க மறுக்கிறாள்.நன்றி சொல்லி புரப்பட ஆயத்தமானேன்.களைத்துப்போய் இருக்கிறீர்கள் அண்மையில் தான் வீடு தேனீர் அருந்திச்செல்லுமாறு கேட்கிறாள்.சரி அவளைப்பின்தொடர்ந்தேன்.


ஒரு மிகவும் பாழடைந்த வீடு.அந்த வீடு மழைக்கு ஒழுகாது அதன்.கூரைக்குள்ளால் மழை கொட்டும் என நினைக்கிறேன்.வீட்டு வாசலில் சிலநாய்க்குட்டிகள் ஒரு குரங்குக்குட்டி இவை அவளின் செல்லப்பிராணிகள்.ஒரு குட்டிப்பையன் வந்தான்.அது அவளின் மகன்.அவள் பேசிய விதம் அவளின் மகனுக்காகவே அவள் வாழ்வது போல் இருந்தது.தானாகவே தன் மொத்தவாழ்க்கை கதையையும் பகிர்ந்தாள்.மிகவும் சோகங்களும் சவால்களும் நிறைந்தது.சில தொற்றா நோய்களும் இருந்ததாக கூறினாள்.இவ்வளவு பிரச்சனைகளோடு ஒருத்தி வாழ்வது என்றால் அவளுக்கு தனியான தைரியம் வேண்டும்.

ஒரு ஒழுங்கான வீடுகட்டி அதில் நிம்மதியாய் உறங்குவதற்காக போராடினாள்.அடுத்து எப்போதும் பேசும்போது தனது மகனின் படிப்பு தான் அவளின் அடுத்தகனவு.பெடியனை யாழ் இந்துக்கல்லூரியில் சேர்க்கவேண்டும் என்று ஆசைப்பட்டாள்.என்னால் முடிந்த அளவு உதவினேன்.அவனுடைய கல்விநடவெடிக்கைகளுக்கும் என்னால் முடிந்தவரை பங்களித்தேன்.ஒருநாள் "நீங்கள் ஏன் கஷ்ட்டப்படுகிறீர்கள்.பெடியனுக்கு ஒரு சைக்கிள் வாங்கித்தரவோ?" என்று கேட்டதற்கு.வேணாம் அவன் சின்னப்பெடியன் தனியா அவனை ரோட்டில விட்டிட்டு நான் பதறிக்கொண்டு இருக்கவேணும். நானே அவனை ஏத்திஇறக்கிறன் எண்டாள்.எடிவிசரி எனக்கு இந்த வார்த்தை தான் உன்னில் கோவம் வர வைக்கிறது.இப்ப எப்பிடி அவனைத் தனியா விட்டுப் போக மனசு வந்தது இனி எப்பிடி அவன் தனிய இருப்பான் நீ இல்லாமல்.


எப்போதும் எனக்கு அழைப்பு விடுப்பது இல்லை ஏதாவது பிரச்சனைகளின் உச்சகட்டத்திலும் என் பிறந்தநாளுக்கும் தான் அழைப்புவரும்.என்னால் முடிந்தளவுக்கு உதவுவேன்.இறுதியாகவும் விரக்தியின் உச்சத்தில் கொரோனாகாலத்தில் அழைப்பு வந்தது.சில பிரபல அரசியல்வாதிகளின் வாலுகளும் அந்தப்பிரச்சனையில் சம்பந்தப்பட்டிருந்தன.பிரச்சனை தடக்கெடுக்க உதவினேன்.அன்று ஒரு மகிழ்ச்சியான நிகழ்வையும் கண்டேன்.அவளுக்கு 4 பெண் பிள்ளைகளும் இருந்தார்கள் அதில் ஒருத்தி வெலை செய்ய ஆரம்பித்ததாகவும் அவளால் ஒரு வீடும் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. உண்மையில் பெரும்மகிழ்ச்சி அவளின் கனவுகள் நிறைவேறிக்கொண்டு இருந்தன என்று.

நேற்று சில அரசியல் சார் முடிவுகளை எடுக்கும்பொருட்டு என் தம்பிகளை அழைத்து விருந்து ஒன்றுநடைபெற்றவண்ணம் இருந்தது.என் தொலைபேசியும் off இல் இருந்தது.நிறைய missed call கள் இருந்தது.அதில் ஒருதம்பி அண்ணே ஒரு விபத்து ஒரு பெண்இறந்துவிட்டார் என்று ஒரு செய்தியைக்காட்ட முற்ட்டான்.நான் "அக்கறை இல்லாமல் கண்டபடி ஓடுறது ஒவ்வொருநாளும் இப்பிடி நடக்குது தானே.சரி விடு உதப்பிறகு பார்ப்போம்" என்றபடி கடந்தேன்.


இரவு இன்னுமொரு தம்பி சொன்னான் "அண்ணே விடிய நடந்த விபத்து விரக்தி காரணமாக நடந்த தற்கொலை போல் இருக்கிறது என்று கண்ணால் கண்டசாட்சிகள் கூறுவதாகச் சொன்னான்.இறந்தவர் முன்னாள் போராளி" என்றும் சொல்ல.வலைத்தளங்களை தட்டினேன் நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை அது இவளாக இருக்குமென்று.

அவளுடைய தொலைபேசி இலக்கம் சேமித்து வைக்கவில்லை.நேற்றைய அழைப்புகளை நான் எடுக்கவும் இல்லை.ஒரு வேளை நேற்றும் அழைப்பை மேற்கொண்டிருப்பாளோ........

ஊரிளுள்ள பெண்களுக்கெல்லாம் முகப்புத்தகத்தில் தைரியம் சொன்னவள் நீ
உன்கனவுகள் ஒவ்வொன்றாய் கைகூடிய வேளையில் ஏன் இந்த முடிவு?

சரி போய்வா என்று சொல்லியும் நம் இல்லை."போ" வராதே.ஒரு போராடிவாழ்ந்த முன்னாள்ப்போராளியின் அத்தியாயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

Previous Post Next Post