அகதிகளைக் கெட்ட வார்த்தையால் அழைக்கும் பிரான்ஸ் பொலிஸ்! அதிர்ச்சி தகவல் அம்பலம்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பிரான்சில் காவல்துறையினர் குறித்து இரண்டு விடயங்கள் அதிகம் பேசப்படுவதுண்டு.

ஒன்று காவல்துறையினரின் வன்முறை, மற்றொன்று தற்கொலை செய்துகொள்ளும் காவல்துறையினர்.

பல்வேறு நிறுவனங்களில் ஒரு தொழிலாளியாக நுழைந்து, அங்கு நடக்கும் தவறுகளை கண்டுபிடிப்பதில் புகழ்பெற்றவர் Valentin Gendrot (32) என்ற பத்திரிகையாளர்.

காவல்துறையினர் குறித்து கூறப்படும் இந்த இரண்டு வியங்கள் தொடர்பில் அறிந்துகொள்வதற்காக உண்மையாகவே காவல்துறையில் சேர விண்ணப்பித்தார் Valentin.

வெறும் மூன்றே மாத பயிற்சிக்குப்பின் Valentinக்கு காவல்துறை சீருடையும், துப்பாக்கி ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

பாரீஸ் 19ஆம் வட்டார காவல் நிலையம் ஒன்றில் பாதுகாப்பு உதவியாளாராக பணியமர்த்தப்பட்டுள்ளார் Valentin.

நாட்டின் பிரதிநிதிகளான காவல்துறை அதிகாரிகள், கருப்பினத்தவர்கள், அரேபியர்கள் மற்றும் அகதிகளை கெட்ட வார்த்தையை பயன்படுத்தி அழைப்பதைக் கண்டபோது அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கிறார் அவர்.

பணியில் சேர்ந்து சில நாட்களில் அகதியாகிய பதின்ம வயது சிறுவன் ஒருவனை காவல்துறை வாகனத்தின் பின்பக்கத்தில் வைத்து அடித்து துவம்சம் செய்திருக்கிறார்கள் காவல்துறையினர். இந்த விடயம் பதிவுசெய்யப்படவோ, பத்திரிகைகளில் வரவோ இல்லை, எல்லாம் வாகனத்தின் பின்புறமே முடிந்துபோயிருக்கிறது.

இதுபோன்ற மோசமான நடவடிக்கைகளில் காவல்துறை ஒருவர் தவறை மற்றவர் மூடி மறைத்துக்கொள்கிறார்கள். ஒரு இடத்தில் இளைஞர்கள் சிலர் ஒலிப்பெருக்கி ஒன்றுடன் நடமாடுவதாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அங்கு சென்ற காவல்துறையினர், அந்த இளைஞர்களை அவமதிக்க, ஒரு இளைஞர் கோபமடைந்து பதிலுக்கு திட்ட, அவரைப் பிடித்து அடித்துத் துவைத்து குற்றம் சாட்டி கைது செய்திருகிறார்கள்.

பேசாமல் அந்த ஒலிப்பெருக்கியை மட்டும் பறித்துச் சென்றிருந்தால் கூட பிரச்சினை முடிந்திருக்கும், ஆனால், வேண்டுமென்றே அவர்களுக்கு எரிச்சலூட்டி, அவர்களை கோபப்படுத்திவிட்டு, பின்னர் அந்த இளைஞரை தன்னுடனிருந்த காவல்அதிகாரி அடித்து உதைத்ததாக தெரிவிக்கிறார் Valentin.

பின்னர் போலியாக அந்த இளைஞர் மீது ஒரு குற்றச்சாட்டை பதிவு செய்து அவரை சிறையிலடைத்திருக்கிறார்கள் அந்த காவல்துறையினர்.

இன்னும் பல உண்மைகளை வெளிக்கொணரவேண்டும் என்பதால், மனசாட்சிக்கு விரோதமாக அவர்களுக்கு ஒத்துப்போனதாத தெரிவிக்கிறார் Valentin.

ஒருபக்கம் இப்படியிருக்க, மறுபக்கம் 2019ஆம் ஆண்டில் மட்டும் 59 காவல் அதிகாரிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள்.

மோசமான அளவில் பயிற்சியும் குறைந்த அளவில் ஊதியமும் பெறும் காவல்துறையினர் தொடர் மன அழுத்தம், தினமும் சந்திக்கும் வெறுப்பு மற்றும் வன்முறை காரணமாக மன அழுத்தத்திற்குள்ளாகி தற்கொலை செய்வதை அறிந்து அதிர்ச்சியடைந்ததாக தெரிவிக்கிறார் Valentin.

தான் சந்தித்த அனுபவங்களை Flic (Cop) என்ற பெயரில் நேற்று (02/09/2020) வெளியிட்டுள்ளார் Valentin.

இது காவல்துறையினருக்கு எதிரான புத்தகம் அல்ல, நான் ஒரு குறிப்பிட்ட காவல் நிலையத்தில் பணியாற்றியபோது நான் கண்ட விடயங்களைத்தான் இந்த புத்தகத்தில் எழுதியிருக்கிறேன் என்கிறார் Valentin.

ஏதோ பிரச்சினை இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிகிறது, காவல் வேலை என்பது மகிழ்ச்சியான ஒரு வேலை அல்ல, இந்த புத்தகம் வெளியான பிறகாவது மாற்றங்கள் ஏற்படும் என நம்புவதாக தெரிவிக்கிறார் Valentin.
https://www.francetvinfo.fr/faits-divers/police/violences-policieres/tabassages-et-manque-de-moyens-un-journaliste-raconte-deux-ans-d-infiltration-dans-la-police_4093465.html?fbclid=IwAR0wBpdzFx9z0cQGD7CFse23Ugj_eldjy-a_3gb8JUaqvCRANkBqP_oswGY
Previous Post Next Post