மதுபோதையில் ரவுடிகள் அட்டகாசம்!!செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் பதற்றம்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் மதுபோதையில் அட்டகாசம் செய்த ரௌடிகள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று இரவு மதுபோதையில் ஆலயத்திற்கு வந்து, பொதுமக்களிற்கு அசெளகரியம் ஏற்படுத்தியவர்களை வல்வெட்டித்துறை பொலிசார் எச்சரித்துள்ளனர். இதன்போது, மதுபோதை ரௌடிகள் சிலர், வல்வெட்டித்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் சிலரை தாக்க முயன்றனர்.

இதனால் அவர்களை வல்வெட்டித்துறை பொலிசார் கைது செய்து பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து, ஆலய வளாகத்தைவிட்டு பொதுமக்களை வெளியேறும்படியும், வர்த்தக நிலையங்களை மூடும்படியும் ஆலய நிர்வாகம் ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்து வருகிறது.
Previous Post Next Post