கனடாவில் கைத் துப்பாக்கியுடன் மூன்று ஈழத் தமிழர்கள் கைது!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
சட்டத்துக்குப் புறம்பாக பதிவு செய்யப்படாத கைத் துப்பாக்கியுடன் பயணித்த மூன்று ஈழத் தமிழர்களை கனடாப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பான தகவல்களை டர்ஹாம் பொலிஸார் தங்களது இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த 22 ஆம் திகதி இரவு 11.30 மணியளவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், விட்பி வாட்ஃபோர்ட் வீதியில் சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றை மறித்துச் சோதனையிட்டுள்ளனர்.

குறித்த வாகனத்தில் மதுபான போத்தல்கள் இருப்பதையடுத்து மேலதிக சோதனைகளை மேற்கொண்டபோது கைத் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வாகனத்தில் பயணித்த அப்பாத்துரை கஜன் (வயது-39), பரமானந்தன் பிரதீப் (வயது-29) மற்றும் செல்வநாதன் சஜீத் (வயது-27) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என டர்ஹாம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Previous Post Next Post