களோபரமானது நாடாளுமன்றம்! சஜித் அணி வெளிநடப்பு!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்றைய நாடாளுமன்ற அமர்வில் வெளிநடப்புச் செய்துள்ளனர்.

முன்னதாக இன்றைய நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான போது, கறுப்பு சால்வை அணிந்து தமது எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து வெளிநடப்புச் செய்துள்ளனர்.


தூக்குத் தண்டனைக் கைதியான பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக இன்று சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

இதன்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கழுத்தில் கறுப்பு சால்வை அணிந்துகொண்டு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது ஆளும் மற்றும் எதிர்க் கட்சியினருக்கிடையே கடும் வாக்குவாதங்களும் ஏற்பட்டன.


ஆனால் நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்தே அவருக்கு நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்க அனுமதியளிக்கப்பட்டதாக சபாநாயகர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
Previous Post Next Post