யாழில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடந்த மோசடி! நியாயம் கேட்டவர் மீது தாக்குதல்!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
தென்மராட்சியில் எரிபொருள் நிரப்பும் நிலையமொன்றில் ஏற்பட்ட தகராற்றில் காயமடைந்த ஒருவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மந்துவிலை சேர்ந்த 46 வயதான ஒருவரே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது வாகனத்திற்கு 1000 ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பியதாக, எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர் பொய் சொன்னதாக அவர் தெரிவித்ததை தொடர்ந்து எழுந்த முரண்பாட்டில், எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்களால் தாக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் தெரிவித்த வாக்குமூலத்தின்படி- கைதடியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 1,000 ரூபாவிற்கு எரிபொருள் நிரப்ப சென்றேன். அங்குள்ள பணியாளரிடம் பணத்தை கொடுத்தேன்.

அவர் எரிபொருள் நிரப்பியதாக கூறியதையடுத்து வாகனத்தில் புறப்பட்டேன். சிறிது தூரம் சென்ற பின்னரே வாகனத்தில் எரிபொருள் நிரப்பப்படவில்லையென்பதை அவதானித்தேன்.

உடனடிகாக திரும்பி வந்து, இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டினேன். அதனால் எழுந்த முரண்பாட்டில் தாக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்க்பட்டுள்ளேன்“ என்றார்.
Previous Post Next Post