கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தால் வறிய மாணவர்களுக்கு உதவிகள்! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் வறிய குடும்பத்தில் உள்ள உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான உதவித் தொகைகள் கியூடெக் கரித்தாஸ் நிறுவனத்தினரால் கடந்த சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தின் கல்வி மேம்பாட்டு செயற்றிட்டத்தின் கீழ் “Child Nazereth trust” அமைப்பினரால் இவ் உதவித் தொகைகள் வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள், பெற்றோருக்கான கருத்தமர்வும் இடம்பெற்றுள்ளது.

இதில் கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் இயக்குநர் அருட்தந்தை ச.இயூஜின் பிரான்சிஸ் தலைமையில் எதிர்கால கல்வி மேம்பாட்டுக்கான வழிகாட்டல் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. Previous Post Next Post