இல் து பிரான்சுக்குள் புதிய கட்டுப்பாடுகள்! அறிவித்தார் சுகாதார அமைச்சர்!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இல் து பிரான்சுக்குள் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ச்சியாக அதிகரித்து வருவதை அடுத்து, சில புதிய கட்டுப்பாடுகளை சுகாதார அமைச்சர் நேற்று வெளியிட்டார்.

சுகாதார அமைச்சர் Olivier Véran நேற்று தெரிவிக்கும் போது, இல் து பிரான்ஸ் மாகாணம் உட்பட Lille, Toulouse, Saint-Étienne, Rouen, Grenoble மற்றும் Montpellier ஆகிய நகரங்களுக்கும் இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தும் என தெரிவித்தார்.

புதிய கட்டுப்பாடுகள்!

• 5,000 பேர் வரை அனுமதிக்கப்பட்ட பாரிய நிகழ்வுகள், உதைபந்தாட்ட போட்டிகள், மைதான நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு, அதிகபட்சமாக 1,000 பேர் வரை மாத்திரமே இனிமேல் அனுமதிக்கப்படும்.

• மதுச்சாலைகள் அல்லது இரவு நேர மதுச்சாலைகள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்படும்.

• சிறிய அளவு கொண்டாட்டங்கள், விருந்துபசாரங்கள், பிறந்தநாள் விழாக்கள் மற்றும் திருமண வைபோகங்களின் போது 30 பேர் மாத்திரமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்கள்.

• பூங்காக்கள், வீதிகள் மற்றும் பொது இடங்களில் 10 பேர் வரை மாத்திரமே ஒன்று கூடலாம்.

• விளையாட்டு அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் அனைத்து விருந்து விழா கூடங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன.

போன்ற புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக Olivier Véran அறிவித்தார்.
Previous Post Next Post