காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் கிளிநொச்சி மாணவன் தற்கொலை!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
காதலியின் பிரிவைத் தாங்கிக் கொள்ள முடியாமலே கிளிநொச்சியில் மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று முன்தினம் கிளிநொச்சியில் உயர்தரத்தில் வணிகப் பிரிவில் 3ஏ எடுத்த யேகேந்திரன் அஜந்தன் (வயது-21) என்ற மாணவன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவரின் தற்கொலைக்கான காரணம் வெளிவராத நிலையில், அவரின் உறவினர்களால் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் ஒரு பெண்ணைக் காதலித்து வந்திருந்ததாகவும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக குறித்த பெண் பிரிந்து சென்றுள்ளதாகவும் அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனாலேயே மனமுடைந்த மாணவன், புகையிரதம் முன் பாய்ந்து தன் உயிரை மாய்த்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post