கொரோனாவின் கோரப் பிடிக்குள் பிரான்ஸ்! ஒரே நாளில் என்றுமில்லாத உச்சக் கட்டத் தொற்று!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இதுவரை இல்லாத அளவு கொரோனா தொற்று இன்று ஒரே நாளில் பதிவாகியுள்ளது.

பொது சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களின் படி, கடந்த 24 மணிநேரத்தில் 8,975 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் பதிவாகியுள்ள அதிகபட்ச தொற்று எண்ணிக்கை இதுவாகும். (வியாழக்கிழமை 7,157 பேருக்கும், புதன்கிழமை 7,017 பேருக்கும் கொரோன தொற்று ஏற்பட்டிருந்தது)

4.2% வீதத்தில் இருந்த கொரோனா தொற்று வீதம் தற்போது 4.5% வீதத்தை எட்டியுள்ளது.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 53 கொரோனா தொற்று வலையங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4,671 பேர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 473 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 30,686 பேர் சாவடைந்துள்ளனர். இவர்களில் 18 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்தவர்களாவர்.
Previous Post Next Post