யாழில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை!


யாழ்ப்பாணம் - நெல்லியடி இராஜகிராமம் பகுதியில் கர்ப்பிணிப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இச் சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளின் தாயாரான 29 வயதான கஜேந்திரன் துசேந்தினி என்பவரே உயிரிழந்துள்ளதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட அவரை உறவினர்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சடலம் மரண விசாரணைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Previous Post Next Post