பிரான்ஸில் கொரோனா! ஐரோப்பாவில் இதுவரை காணாத தொற்று ஒரே நாளில் பதிவு..!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை பதிவாகாத எண்ணிக்கை ஒன்று கடந்த 24 மணிநேரத்தில் பதிவாகியுள்ளது. 

பிரான்சில் கடந்த 24 மணிநேரத்தில் 30,620 பேருக்கு கொரோனா தொற்று அதிவாகியுள்ளது. ஐரோப்பாவில் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து எந்த ஒரு நாட்டிலும் இதுபோன்ற அளவில் ஒரே நாளில் பதிவாகவில்லை.

இன்றோடு பிரான்சில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 809,684 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 88 பேர் சாவடைந்துள்ளனர். மொத்தமாக 33,125 பேர் சாவடைந்துள்ளனர்.

கடந்த ஏழு நாட்களில் 6,529 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1,750 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொற்று வீதம் 12.6% ஆக உயர்வடைந்துள்ளது.
Previous Post Next Post