வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தம்பதி மின்னல் தாக்கி பரிதாபச் சாவு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கணவனும் மனைவியும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் திருக்கோவில் விநாயகபுரத்தில் இடம்பெற்றது.

விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த லோகநாயகம் யோகேஸ்வரன் (வயது -46) அவரது மனைவி ஜெயசுதா (வயது-46) ஆகிய இருவருமே மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்தனர். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள்.

தம்பதியினர் சாகாமம் கப்பித்தலாவ பகுதியிலுள்ள தமது காணியில் கச்சான் செய்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியுள்ளது.

சடலங்கள் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post