கம்பஹா மாவட்டம் முழுவதும் ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது!

கம்பஹா மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி தொடக்கம் வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இந்த அறிவிப்பை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சவேந்திர சில்வா வெளியிட்டுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தில் 19 பொலிஸ் பிரிவுகளில் தற்போது ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் இன்று இரவு 10 மணி முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. ஒக்டோபர் 4ஆம் திகதி மினுவாங்கொட கோவிட் -19 கொத்தணி தோன்றியதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது.

மொத்தம் 2 ஆயிரத்து 342 பேர் இதுவரை மினுவாங்கொட கோவிட் -19 கொத்தணியில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Previous Post Next Post