பிரான்ஸில் பள்ளிவாசல் மூடுவதற்கு எதிரான வழக்கு! அதிரடித் தீர்ப்பளித்தது நீதிமன்றம்!!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
Pantin நகர பள்ளிவாசல் மூடபப்டுவதாக Seine-Saint-Denis மாவட்ட நிர்வாக நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

(27/10/2020) செவ்வாய்க்கிழமை காலை இந்த தீர்ப்பை நீதிமன்றம் அளித்துள்ளது. பேராசிரியர் Samuel Paty படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பள்ளிவாசல் மறைமுகமாக செயற்பட்டதாகவும், அவர்கள் வெளியிட்டகருத்துக்களே படுகொலைக்கு தூண்டியதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து உள்துறை அமைச்சர் பள்ளிவாசலை மூடுவதற்கு உத்தரவிட்டார்.

இந்த தடையை எதிர்த்து La Fédération musulmane de Pantin (Pantin நகர இஸ்லாமிய அமைப்பு) வழக்குதொடர்ந்தது. Seine-Saint-Denis நகர நிர்வாக நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘பள்ளிவாசலைஅடுத்த ஆறு மாதங்களுக்கு மூடுவதற்கு‘ உத்தரவிட்டுள்ளது.

குறித்த பள்ளிவாசல் சார்பாக இயங்கும் முகநூல் பக்கத்தில் குறித்த பேராசிரியர் குறித்த இழிவான தகவல்கள்காணொளியாக பகிரப்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த காணொளியே பயங்கரவாதியைகொலை செய்ய தூண்டியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post