யாழில் மோட்டார் சைக்கிளை மேதித் தள்ளியது டிப்பர்! இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!!

(கோப்புப் படம்)
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கோப்பாய் சந்திப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் வாகனம் மோதியதாலேயே விபத்து நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த கருணாரட்ணம் கருணானந்தன் (வயது 36) என்ற குடும்பஸ்தரே விபத்தில் சிக்கியுள்ளார்.

படுகாயம் அடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது வழியில் அவர் உயிரிழந்துள்ளார். சடலம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Previous Post Next Post