பிரான்ஸில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு! நாளை முதல் நடைமுறைக்கு!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பரிஸ் மற்றும் அதன் புறநகர் சிலவற்றுக்கு புதிய கட்டுப்பாடுகள் மற்றும் அளவீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இல் து பிரான்ஸ் மாகாணத்தை <<அதிகபட்ட கொரோனா தொற்று வலையம்>> ஆக நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்தது. இல் து பிரான்சின் மருத்துவமனைகளில் உள்ள 'தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டில்களில் 36% வீதமானவை நிரப்பப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்று திங்கட்கிழமை பரிஸ் காவல்துறை தலைமைச் செயலதிகாரியும், நகர முதல்வர் ஆன் இதால்கோவும் இணைந்து பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். அவை நாளை செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் வண்ணம் உடனடியாக செயற்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொற்றுக்கள் கட்டுப்பாட்டை மீறி மிக வேகமாக பரவி வருகின்றது. உடனடியாக நாம் அதை தடுக்க வேண்டும் என காவல்துறை தலைமை அதிகாரி Didier Lallement தெரிவித்தார்.

*****

சென்றமுறை கொரோனாவுக்கு எதிராக நடவடிக்கைகளின் போது மதுச்சாலைகள், உணவகங்கள் என அனைத்தும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இம்முறை சில தளவுகளோடு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

• இறுதிச்சடங்கு, சந்திகள், வணிக நிலயங்கள் தவிர்த்து வேறு எங்கேயும் 10 இற்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

• அனைத்து மதுச்சாலைகளும் கட்டாயமாக மூடப்படுகின்றன. ஆனால் உணவகங்கள் திறந்திருக்கும். (உணவங்கள் மூடப்படுவதாக முன்னர் பிரதமர் அறிவித்திருந்த நிலையில், பலத்த ஆர்ப்பாட்டங்களுக்கு இடையில் இந்த தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.)

• பொது இடங்கள், செந்தனி ஆற்றங்கரையில், பூங்காக்கள் போன்ற இடங்களில் இரவு 10 மணிக்கு பின்னர் மதுபானங்கள் அருந்தவோ, விற்பனை செய்யவோ தடை விதிக்கப்படுகின்றது.

• குடும்ப விருந்துபசார விழாக்கள், மாணவர்கள் ஒன்றினையும் விழாக்கள், விருந்துகள் போன்றவற்றுக்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

• நடன அரங்குகள், சமூக அரங்குகள் மூடப்படுகின்றன.

• உடற்பயிற்சி கூடம், விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள் அனைத்தும் மூடப்படுகின்றன. (நீச்சல் தடாகங்களில் சிறுவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்)

• பொது போக்குவரத்துக்கள் எவ்வித தடையுமின்றி வழமை போன்று இயங்கும்.

• பல்கலைக்கழக விரிவுரை அரங்குகளில் அதன் கொள்ளளவில் 50% வீதமான மாணவர்களுக்கு மாத்திரமே அனுமதி அளிக்கப்படும்.

• கடைகள், வணிக வளாகங்களில் ஒவ்வொரு வாடிக்கைகளார்களுக்கும் நான்கு சதுர மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும். அதற்குரிய வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

போன்ற அளவீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

*****

இந்த அளவீடுகள் நாளை ஒக்டோபர் 6 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும். அடுத்த 15 நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Paris, Seine-Saint-Denis, Val-de-Marne மற்றும் Hauts-de-Seine மாவட்டங்களுக்கு இந்த புதிய அளவீடுகள் பொருந்தும்.
Previous Post Next Post