யாழிலிருந்து வவுனியாவுக்குச் சென்ற பஸ் மாங்குளத்தில் விபத்து! (படங்கள்)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று முல்லைத்தீவு மாங்குளம் சந்தி பகுதியில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வீதியின் ஓரேத்தில் நிறுத்தப்பட்டிருந்த அம்புலன்ஸ் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றுடன் மோதியுள்ளது.

அத்துடன் அருகிலிருந்த பாலத்துடன் மோதியும் விபத்துக்குள்ளானது.

பஸ் சாரதிக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதன் விளைவாக இந்த அனர்த்தம் ஏற்றபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த பயணியொருவரும், பஸ்ஸின் சாரதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்.

மேலும் இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post