சமூக வலைத்தளங்களில் உலாவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது..!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சேவைப் பிரிவில் பணி புரியும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளதாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்திற்கு மருப்பு தெரிவித்து பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பத்தரமுல்லை, பெலவத்தை பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான சேவைப் பிரிவு ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரொனா தொற்றுறுதியாகியள்ளதாக என சந்தேகம் நிலவுவதாக சபாநாயகர் தனது கருத்தை முன்வைத்த போதே இந்த கருத்தும் முன்வைக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
Previous Post Next Post