கொழும்பிலிருந்து கொரோனா நோயாளியுடன் யாழ்ப்பாணம் வந்த பேருந்து கண்டுபிடிப்பு!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்கள் பயணித்த 6 பேருந்துகள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் இதனை உறுதி செய்துள்ளார்.

நாங்கள் அடையாளம் கண்டுள்ள பேருந்துகள் பல உள்ளன. அதில் ND 4890 என்ற இலக்கம் கொண்ட கொழும்பு - மெதகம சென்ற பேருந்தில் கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார். அத்துடன் ND 2350 என்ற இலக்கம் கொண்ட மாக்கும்புர - காலி சென்ற பேருந்து ஒன்றிலும் கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார்.

அதேபோல் ND 549 - என்ற இலக்கம் கொண்ட அம்பலங்கொட பேருந்தில் கடவத்தை சென்ற கொரோனா நோயாளி ஒருவர் இருந்துள்ளார். அத்துடன் கொழும்பு - யாழ்ப்பாணம் சென்ற ND-6503 என்ற இலக்கம் கொண்ட பேருந்தில் கொரோனா நோயாளி ஒருவர் பயணித்துள்ளார்.

எல்பிட்டிய - கொழும்பு சென்ற ND 9788 என்ற இலக்கம் கொண்ட பேருந்திலும் கொரோனா நோயாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

காலி - கடவத்தை சென்ற NF 7515 என்ற பேருந்திலும் கொரோனா நோயாளி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளும் கண்கானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அதிக சொகுசு பேருந்துகளில் பயணிகளை ஏற்றுவதற்கு முன்னர் அவர்களின் உடல் வெப்பநிலையை சோதனையிடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post