பணிப் புறக்கணிப்பில் குதிக்கிறது வடக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கம்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவிற்கு சென்று பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தரான கர்ப்பவதித் தாயார் ஒருவர் தொலைதூரப் பயணித்தினால் குழந்தையை இழந்தமைக்கு நீதி கோரியும் இடமாற்ற விவகாரத்திற்கு தீர்வு கோரியும் எதிர்வரும் திங்கட் கிழமை வடக்கு மாகாணம் முழுமையிலும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என்று வடக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகதர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இடம்பெற்றது.

அங்கு உரையாற்றிய சங்கப் பிரதிநிதிகள் தமது போராட்டத்துடன் கை கோர்க்குமாறு ஏனைய உத்தியோகத்தர்கள் சங்கத்தினருக்கும் அழைப்பு விடுத்தனர்.

தொடர்புபட்ட செய்தி:

Previous Post Next Post