ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவர்கள் மூவர் கிணற்றில் சடலமாக மீட்பு!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களின் சடலங்கள் கலேவலவில் உள்ள ரன்வாடியாவா பகுதியில் உள்ள நீர்ப்பாசனக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இன்று காலை ரன்வாடியாவா பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குளிக்க வந்த குழந்தைகள் நீர்ப்பாசனக் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என்று மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் அதே பகுதியில் வசிக்கும் 07 வயது சிறுவனும், 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகளும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கலேவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post