யாழ்.பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் மயங்கி விழுந்த மாணவியால் பரபரப்பு!!!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்.பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாக மாணவி ஒருவர் இன்றிரவு 7 மணியளவில் திடீரென மயங்கி விழுந்தமையால் கொரோனா பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கம்பஹாவைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்.பல்கலைக் கழகத்தின் பம்பைமடு பகுதியில் உள்ள வவுனியா வளாகத்தில் கல்வி கற்று வருகின்றார்.

திடீரென மயங்கி விழுந்தமையால் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து வளாக மாணவர்களால் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அம்புலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் குறித்த மாணவி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பீ.சீ.ஆர் பரிசோதனைக்காக தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹாவைச் சேர்ந்த மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணிய வவுனியா வளாக மாணவர்கள் 90 பேரிடம் இன்று பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post