பிரான்ஸ் அங்காடிகளில் அடுத்த வாரம் வரும் புதிய கட்டுப்பாடுகள்! பிரதமர் அறிவிப்பு!!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
பல்பொருள் அங்காடிகளில் அத்தியாவசியம் அற்ற பொருட்கள் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

நேற்று தொலைக்காட்சி ஒன்றில் தோன்றிய பிரதமர் Jean Castex, இந்த புதிய கட்டுப்பாடை அறிவித்தார். ‘உள்ளிருப்பு நிறைவுக்கு வருமா?’ என கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போது....

"இல்லை, எங்கள் அறிவிப்பில் இருந்து பின்செல்லமாட்டோம்... இது மிகவும் ஆரம்ப நாட்கள். மீண்டு கடைகள் திறக்கப்பட மாட்டாது. நாங்கள் இந்த முடிவை ‘மக்களை காப்பாற்ற்ற’ எடுத்துள்ளோம். அவர்களின் உடல்நலத்தை காப்பதே எங்களது முன்னுரிமை" என குறிப்பிட்டார்.

அதேவேளை, பல்பொருள் அங்காடிகளில் அடிப்படை தேவைகளுக்குரிய பொருட்களை மாத்திரமே விற்பனை செய்யவேண்டும். இந்த புதிய கட்டுப்பாடு அடுத்தவார செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் எனவும் பிரதமர் அறிவித்துள்ளார்.

அதேவேளை, பல்பொருள் அங்காடிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்குவதற்காக அரசு தரப்பில் 20 பில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்..
Previous Post Next Post