பிரான்ஸ் ஜனாதிபதி மகரோனுக்குக் கொலை மிரட்டல்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அல்கொய்தா தீவிரவாத அமைப்பு, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு வெளிப்படையாகவே மிரட்டல் விடுத்துள்ளது.

பாரீஸுக்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றிய Samuel Paty என்பவர், தனது வகுப்பில் சர்ச்சைக்குரிய முகமது நபியின் கேலிச்சித்திரங்களை காட்டியதால் ஏற்பட்ட சர்ச்சையில் தீவிரவாதியால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்,

Samuel Patyயின் இறுதிச்சடங்கில் பேசிய இம்மானுவல் மக்ரோன், கேலிச்சித்திரக் கலாச்சாரம் தொடரும், அதுதங்கள் பேச்சுரிமை, உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை என்று பேசியிருந்தார்.

அவரது கருத்துக்கள், பல இஸ்லாமிய நாடுகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தின.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு மிரட்டல் விடுத்துள்ள அல்கொய்தா தீவிரவாத அமைப்பு, பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிப்பது போதாது என்று கூறியுள்ளது.

பிரெஞ்சு தயாரிப்புகளை புறக்கணிப்பது நம் கடமை, ஆனால் அது போதாது என்று அந்த அமைப்புவெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இம்மானுவல் மக்ரோனின் கருத்துக்களுக்காக பழிவாங்குவோம் என்று தெரிவித்துள்ள அல்கொய்தா அமைப்பு, மக்ரோனை, முதிர்ச்சி இல்லாதவர், அனுபவம் இல்லாதவர், சிறிய மூளை உடையவர் என்றெல்லாம் விமர்சித்துள்ளதோடு, அவர் முகமது நபியை அவமதிக்க வலியுறுத்துவதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.

முகமது நபியை அவமதிக்கும் எவரையும் கொல்வது ஒவ்வொரு இஸ்லாமியரின் உரிமை என்றும் கூறியுள்ளது அந்த அமைப்பு.

இந்நிலையில், மாலியில், அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய, 50க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை வான்வெளித்தாக்குதலில் தனது படையினர் கொன்றுவிட்டதாக பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post