பாடசாலை விடுமுறை மேலும் நீடிப்பு: கல்வி அமைச்சு தீர்மானம்!எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை மேலும் 2 வாரத்துக்கு நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

மூன்றாம் தவணைக்காக பாடசாலைகளை வரும் நவம்பர் 9ஆம் திகதி ஆரம்பிக்கத் திட்டமிட்டிருந்த நிலையில் விடுமுறையை மேலும் இரண்டு வாரங்கள் நீடிக்க இன்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோரோனா வைரஸ் தொற்று பரவலை அடுத்து ஏற்பட்டுள்ள சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு பாடசாலைகளை மீள ஆரம்பிக்க சுகாதார அமைச்சின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு இரண்டு வாரம் விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் இறுதித் தீர்மானம் நவம்பர் மூன்றாவது வாரத்தில் தீர்மானிக்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Previous Post Next Post