யாழில் உணவகப் பணியாளர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியானது!



எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மாநகர், கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள உணவகத்தில் சடலமாக மீட்கப்பட்ட பணியாளர் மாரடைப்பு நோயால் உயிரிழந்துள்ளார் என்று உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டுள்ளது. அதனால் அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருமுருகண்டியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான தர்மலிங்கம் தயாகரன் (வயது-48) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நகரில் கே.கே.எஸ் வீதியில் இயங்கும் பிரபல சைவ உணவகம் ஒன்றில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவர் 3 நாள்களுக்கு முன் அவர் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

நேற்று திங்கட்கிழமை இரவு உறக்கத்துக்குச் சென்ற அவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டார். சடலம் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது.

அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. அவரது உயிரிழப்புக்கு மாரடைப்புக் காரணம் என்று சட்ட மருத்துவ அறிக்கை வழங்கப்பட்டது.

திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்தார். சடலம் இன்று மாலை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேவேளை, அவருக்கு கோரோனா தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்ட நிலையில் இறப்புக்கான காரணம் மாரடைப்பு என்பதால் அந்த சந்தேகம் நீங்கியது என்று இறப்பு விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்புபட்ட செய்தி:
Previous Post Next Post