யாழ்.கொக்குவிலில் விபசார விடுதி முற்றுகை! இரு பெண்கள் உட்பட நால்வர் கைது!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட கொக்குவிலில் வீடொன்றில் கலாசார சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள், ஒரு ஆண் மற்றும் விடுதி உரிமையாளர் என நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொக்குவில் பொற்பதி வீதியில் விடுதியாக இயங்கும் வீடொன்றில் கலாசார சீரழிவு இடம்பெறுவதாக அதிகாரிகளால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்பு பொலிஸ் பிரிவினர் அந்த வீட்டை இன்று வியாழக்கிழமை சோதனை நடவடிக்கைக்கு உள்படுத்தினர்.

அதன்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் இருவரும் (28,38 வயதுடையவர்கள்) ஆண் ஒருவரும் விடுதி உரிமையாளரும் என நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்கள் நால்வரும் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டனர். விசாரணைகளின் பின்னர் அவர்கள் நால்வரும் நாளை யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை கோண்டாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று முன்தினம் கலாசாரச் சீரழிவுகளில் ஈடுபட்டதாக இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post