பிரான்ஸில் உள்ளிருப்பு தளர்த்தப்பட்டது! இன்று முதல் இரவு நேர ஊரடங்கு!! (புதிய அனுமதிப் பத்திரம் இணைப்பு)


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
இன்று டிசம்பர் 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகின்றது.

உள்ளிருப்பு சட்டம் நேற்றோடு தளர்த்தப்பட்டு, இன்று முதல், இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகின்றது. இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை இந்த இரவு நேர ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.

மிக மிக இறுக்கமாக கண்காணிக்கப்பட உள்ள இந்த ஊரடங்கின் போது மிக குறிப்பிட்ட சிலருக்கே வெளியில் செல்ல அனுமதி உள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள், தாதியினர் போன்றோருக்கும், வேலைக்குச் செல்வேர் மற்றும் வேலையில் இருந்து வீடு திரும்புவோருக்கும் இந்த அனுமதி உள்ளது.

நீங்கள் வெளியில் செல்வதற்குரிய புதிய அனுமதி பத்திரம் அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதனை இங்கே அழுத்துவதன் ஊடாக தரவிறக்கலாம்.
Previous Post Next Post