வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரின் வாகனம், சாரதி மீது தாக்குதல்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் பயணித்த வாகனம் தாக்கிச் சேதமாக்கப்பட்டதுடன், பிரதேச சபைச் சாரதியும் தாக்கப்பட்டுள்ளார் என்று இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று மாலை 6.30 மணியளவில் இளவாலை வசந்தபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவரை இனந்தெரியவில்லை என்று தனது முறைப்பாட்டில் வலி.வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் குறிப்பிட்டுள்ளார்.

இளவாலை சேந்தாங்குளம் பகுதியில் வெள்ளநீர் வடிந்தோடு வாய்க்காலை வெட்டும் நடவடிக்கையை கண்காணித்துவிட்டு திரும்பிய வேளையிலேயே தவிசாளரின் வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

வசந்தபுரம் பகுதியில் மறித்த ஒருவர் தலைக்கவசத்தினால் பிரதேச சபை வாகனம் மற்றும் சாரதிக்கு தாக்குதல் நடத்தப்பட்டதாக தவிசாளர் முறைப்பாடு வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கும் பொலிஸார், தாக்குதல் நடத்தியவர் தொடர்பில் விவரம் வழங்கப்படவில்லை என்று குறிப்பிட்டனர்.

வெள்ளநீர் வழிந்தோடும் வகையில் வாய்க்கால் வெட்டும் போது தவிசாளருடன் ஒரு தரப்பு முரண்பட்டுள்ளது என்று தெரிவிக்கும் இளவாலை பொலிஸார், அவர்களில் ஒருவரே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்று சந்தேகிக்கப்படுகின்றது என்றும் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post