மண்டைதீவு திடுதிருக்கை ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேக தின நிகழ்வுகள்! (வீடியோ)

மண்டைதீவு திடுதிருக்கை அருள் மிகு ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேக தின நிகழ்வுகள் இன்றைய தினம் (02) இடம்பெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு குறித்த தினத்தில் வைரவப் பெருமானுக்கு அபிஷேகங்கள் இடம்பெற்றுள்ளன.

மக்களின் நலன் கருதி, மண்டைதீவுப் பொலிஸாரின் அனுமதியுடன் மிகவும் சிறப்பான முறையில் இந் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கடந்த வருடங்களில் வைரவப் பெருமானின் கும்பாபிஷேக தினத்தில் அஷ்டோத்திர சத (108) சங்காபிஷேக நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
Previous Post Next Post