யாழில் பழிதீர்க்க வாள்வெட்டு! ஒருவர் படுகாயம்!!

இணுவில் – கோண்டாவில் காரைக்கால் பகுதியில் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் தலையில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரண்டு தரப்புக்கு இடையே நீடித்து வந்த மோதல் இன்று வாள்வெட்டுச் சம்பவமாக மாறியது என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.

காரைக்காலைச் சேர்ந்த குழு ஒன்று மற்றொரு குழுவுக்கு நேற்று தாக்கியுள்ளது. அதற்குப் பழிதீர்க்கும் வகையில் இன்று காரைக்காலைச் சேர்ந்த குழுவைச் சேர்ந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அதில் இளைஞர் ஒருவர் தலையில் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post