யாழ்.மருதனார்மடத்தில் ஒருவருக்குக் கொரோனாத் தொற்று!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மருனார்மடம் சந்தையில் கடை வைத்திருக்கும் குறித்த நபர் முச்சக்கரவண்டியும் வைத்திருப்பதாகவும் முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு இன்று எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை நாளை, மருதனார்மடம் பகுதியில் மீளவும் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது தொற்றாளர் இவராவார்.

அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.
Previous Post Next Post