வெள்ளவத்தைக் கடலில் தற்கொலை செய்த யாழ்ப்பாணப் பெண் தொடர்பில் வெளியான தகவல்!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வெள்ளவத்தை கடற்கரையில் பெண்ணொருவர் நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.

தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக பணியாற்றும் திருமணமாகாத பெண் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த சுவாமிநாதன் குசலா என்ற 41 வயதுடைய பெண் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பெண் பேராசிரியர் பட்டப்படிப்பு கற்றுக் கொண்டிருந்தவர் என விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்தளாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலுக்கமைய கடலில் மிதந்த சடலத்தை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இந்த பெண் மோட்டார் சைக்கிளில் கடல் பகுதிக்கு வந்து அருகில் அதனை நிறுத்திவிட்டு கடலை நோக்கி சென்றதாக நேரில் பார்த்த பலர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும் வெள்ளவத்தையில் வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post