பருத்தித்துறையில் துயரம்! மகனுக்குக் கொரோனாத் தொற்று!! தாய் தற்கொலை!!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணம் வடமராட்சியில் சில நாட்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றுக்குள்ளானதாக அடையாளம் காணப்பட்ட அரச உத்தியோகத்தர் ஒருவரின் தாயார் இன்று காலை விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை புலோலி பகுதியில் இந்த துயர சம்பவம் நடந்தது.

அண்மையில் அந்தப் பகுதியில் ஒருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். அவரது சகோதரன் உள்ளிட்ட சிலர், தொற்றாளரின் பெற்றோரின் வீட்டுக்கு அருகிலுள்ள வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

பெற்றோர் அயல்வீட்டில் வசித்து வந்தார்கள்.நேற்று அவர்களிற்கு பிசிஆர் சோதனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று காலை அவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார்.
Previous Post Next Post