வத்தளையில் தமிழ் ஆசிரியர் பரிதாபமாகப் பலி!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
வத்தளையில் இன்று இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வத்தளை நகரில் இன்று முற்பகல் கவனயீனமாக பாதையை கடக்க முயன்ற பாடசாலை ஆசிரியை லொறியொன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சிலர் வெள்ளைக் கடவையின் ஊடாக பாதையை கடந்து சென்றதைத் தொடர்ந்து குறித்த ஆசிரியை, திடீரென பாதைக்கு குறுக்கே எதிர்பாராத விதமாக பயணிக்க முற்பட்ட போதே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் 48 வயதுடைய வத்தளை புனித அன்னம்மாள் மகளிர் மகா வித்தியாலயத்தின் தமிழ் பிரிவில் கற்பித்து வந்த ஜெ.சசிகலா என்ற ஆசிரியயை எனத் தெரிய வந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Previous Post Next Post