கொழும்பில் சூட்கேஸில் பெண்ணின் சடலம்! கொலை செய்த பொலிஸ் எஸ்.ஐ. தற்கொலை!!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
  • இரண்டாம் இணைப்பு
கொழும்பு, டேம் வீதியில் பயணப் பொதியொன்றில் சடலமாக மீட்கப்பட்ட பெண் குருவிட்ட - தெப்பனாவை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும், அவரை பயண பொதியில் கொண்டு வந்து டேம் வீதியில் விட்டு செல்லும் நபரும், கடந்த 28 ஆம் திகதி ஹங்வெல்லை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள விடுதி ஒன்றிற்கு செல்லும் காட்சி சீ.சி.ரி.வியில் பதிவானதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மறுநாள் அந்த விடுதியில் இருந்து பயண பொதியொன்றுடன் சந்தேகநபர் மாத்திரம் வெளியேறும் காட்சியும் அதில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

இதனையடுத்து சந்தேகநபர் ஹங்வெல்லையில் இருந்து புறக்கோட்டைக்கு பயணிக்கும் பேருந்து ஒன்றில் ஏறும் காணொளியும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தநிலையில், மேற்கொள்ளபட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர், புத்தல காவல்நிலையத்தில் கடமையாற்றும் விடுமுறையில் சென்றுள்ள உப காவல்துறை பரிசோதகர் என தெரியவந்துள்ளது.
  • முதலாம் இணைப்பு
கொழும்பு ஐந்துலாம்பு சந்திக்கு அருகே டாம் வீதியில் பயணப் பையொன்றினுள் இருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் அவரது கொலையின் பிரதான சந்தேக நபராக உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இந் நிலையில்  பொலிஸாரால் தேடப்பட்டு வந்த 52 வயதுடைய  மொனராகலை புத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும்  உப பொலிஸ் பரிசோதகர் பதல்கும்புர, ஐந்தாம் கட்டை பகுதியில் தற்கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருவிட்டவைச் சேர்ந்த 30 வயதுடைய இளம் பெண்ணின் சடலம் நேற்றுமுன்தினம் பிற்பகல் கொழும்பு டாம் வீதியில் மீட்கப்பட்டது.

பெரியளவிலான புதிய பயணப் பை ஒன்று சுமார் 3 மணி நேரமாக அவ்விடத்தில் இருப்பதை அவதானித்துள்ள வர்த்தகர்கள் அது குறித்து டாம் வீதி பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அந்தப் பயணப் பொதியை சோதனை செய்த போது அதில் சடலம் ஒன்று உள்ளமை தெரியவந்திருந்தது. குறித்த பையில் சடலம் மடித்து வைக்கப்பட்டு, போர்வை ஒன்றினால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த டாம் வீதி பொலிஸார் குருவிட்டையைச் சேர்ந்த 30 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டார்.

Previous Post Next Post