யாழில் குழந்தையை கொடூரமாக தாக்கியது ஏன்? பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய தாய்!

எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரினால் எட்டு மாத குழந்தை கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் - அரியாலை, நாவலடி பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

8 மாதங்களான இந்த குழந்தையை 24 வயதுடைய தாய் ஒருவர் கொடூரமாக தாக்கியுள்ளார். மேலும் குழந்தையை அறைக்கு இழுத்து சென்று அடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வெளியான இந்த காணொளி தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் குறித்த வீட்டிற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதன் போது தாய் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குழந்தை பொலிஸாரின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் குறித்த பெண் குவைத்தில் இருந்து இலங்கைக்கு வந்துள்ளார்.

குவைத்தில் குறித்த பெண் சில காலங்கள் தொழில் செய்து நாடு திரும்பியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் கணவர் குவைத்தில் தொழில் செய்து வருகின்றார். மனைவிக்கு தேவையான பணத்தை கணவர் வழங்காமையினால் தான் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

கணவனை மிரட்டுவதற்காகவே தான் இவ்வாறு குழந்தையை தாக்கி வீடியோ எடுத்ததாக குறித்த பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post