யாழில் கியூடெக் ஹரித்தாஸ் நிறுவனம் நடாத்திய கருத்தரங்கில் பங்குபற்றிய இருவருக்குக் கொரோனா!


எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்..!
யாழ்ப்பாணத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று வியாழக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் கிளிநொச்சியையும் மற்றையவர் பதுளையும் சேர்ந்தவர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் 319 பேரின் மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.கியூடெக் ஹரிதாஸ் நிறுவனம்  நடத்திய பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற 29 பேரிடம் பரிசோதனை பெறப்பட்டது.

அவர்களில் கிளிநொச்சியையும் மற்றையவர் பதுளையையும் சேர்ந்தவர்கள்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 371 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அவர்களில் எவருக்கும் தொற்று இல்லை என அறிக்கையிடப்பட்டுள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
Previous Post Next Post